கேரளாவில் மதரசா ஆசிரியர் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 3 ஆர்எஸ்எஸ் தொண்டர்களையும் விடுதலை செய்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம், சூரியில் உள்ள மசூதி வளாகத்தில் மதரசா ஆசிரியர் முகமது ரியாஸ் மௌலவி கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை காசர்கோடு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதிபதி கே.கே.பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அப்போது, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் 3 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.