கோவை அடுத்துள்ள வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு தமிழக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக வனத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வெள்ளியங்கிரி மலைக்கு கடந்த ஒன்பது மாதங்களில் சென்ற 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, இருதய நோய் உள்ளவர்கள், மூச்சுத்திணறல் உள்ளவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள் உள்ளிட்டோர் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டும், மருத்துவர் அறிவுரை மேற்கொண்டும் வெள்ளியங்கிரி மலையேற வேண்டும்.
மேலும், வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் குழுவாகச் செல்ல வேண்டும். ஒரு சில காரணங்களால், மலையில் உயிரிழக்கும் பக்தர்களைக் கீழே கொண்டு வருவதில், தமிழக வனத்துறைக்கு பெரும் சவலாக உள்ளது. எனவே, இதனை உணர்ந்து பக்தர்கள் செயல்பட வேண்டும்.
எனவே, பொது மக்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை வெளியிடுவதாக, தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.