2024 ஐபிஎல் : குஜராத் டைட்டன்ஸ் வெற்றி !
Sep 19, 2026, 05:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் : குஜராத் டைட்டன்ஸ் வெற்றி !

Murugesan M by Murugesan M
Mar 31, 2024, 07:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024 ஐபிஎல் தொடரின் 12-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.  அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சன் ரைசஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த  சன் ரைசஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்துள்ளது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் 5 வது ஓவரில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதேபோல் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 7 வது ஓவரில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 2 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் மொத்தமாக 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 17 ரன்களில் ஆட்டமிழக்க, ஹென்ரிச் கிளாசென் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது சன் ரைசஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.  ஷாபாஸ் அகமது மற்றும் அப்துல் சமத் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது.  இறுதியாக ஷாபாஸ் அகமது 22 ரன்களும், அப்துல் சமத் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.

இப்போட்டியின் தொடக்கத்தில் அட்டகாசமாக விளையாடிய சன் ரைசஸ் ஐதராபாத் அணி முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக மோஹித் சர்மா 3 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும், அஸ்மத்துல்லா ஒமர்சாய், உமேஷ் யாதவ், நூர் அகமது, ரஷித் கான்ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி.  தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா, சுப்மன் கில் களமிறங்கினர். இதில் விருத்திமான் சாஹா 1 பௌண்டரி மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 25 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல்  சுப்மன் கில் 2பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி வந்தார். இவர் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 45 ரன்களை எடுத்து அரைசதம் வாய்ப்பை தவறவிட்டார்.

பின்னர் விளையாடி வந்த டேவிட் மில்லர் 4 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் விஜய் ஷங்கர் 14 ரங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக 19.1 ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஷாபாஸ் அகமது, மயங்க் மார்கண்டே, பட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Tags: iplGTvsSRHGujartHydrabadGujart won
Share
Tweet
SendShare
Previous Post

வெள்ளியங்கிரி செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

Next Post

ஆணவம் திமுகவின் பிறவி குணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies