திமுக ஆட்சியில் 30 சதவீத மகளிருக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவோம் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது வெறும் 30 சதவீத மகளிருக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுகிறது.

எனக்கு ஏன் ஆயிரம் ரூபாய் நீங்கள் வழங்கவில்லை… pic.twitter.com/bn2x3U27mN
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 31, 2024
எனக்கு ஏன் ஆயிரம் ரூபாய் நீங்கள் வழங்கவில்லை என்று ஒரு சகோதரி முதல்வரை இன்று கேள்வி கேட்டுள்ளார். நீங்கள் இந்த கேள்வியை கேட்பதே தவறு என்று அந்த சகோதரியிடம் திரு முக ஸ்டாலின் சொல்கிறார்.
இந்த ஆணவம் திமுகவின் பிறவி குணம். தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் திமுகவை இந்த தேர்தலில் முழுமையாக நிராகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.