ஸ்ரீ சிவகுமார சுவாமிகள் சமூக பணிகள், அர்ப்பணிப்பு மற்றும் மனிதாபிமான சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ சிவகுமார சுவாமிகள் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிகளுக்கு அஞ்சலி. தன்னலமற்ற சமூக சேவைக்கு அவர் இணையற்ற பங்களிப்புகளை ஆற்றியுள்ளார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றில் அவரது பணி லட்க்கணக்கானோரை அடைந்துள்ளது. அர்ப்பணிப்பு மற்றும் மனிதாபிமான சேவைக்கு அவர் ஒரு ஆழமான எடுத்துக்காட்டு.
நமது சமுதாயத்திற்கான அவரது எண்ணத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம் என அவர் கூறியுள்ளார்.