மும்பையில் நடைபெறும் ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று மும்பை செல்கிறார். அங்கு நடைபெறும் இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தனது செயல்பாடுகளைத் தொடங்கி இன்று 90 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஆர்பிஐ ஏற்பாடு செய்துள்ளது.
விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை அமைச்சர்கள் பகவத் கிஷன்ராவ் கரட் மற்றும் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபடன்விஸ், அஜித் பவார் மற்றும் பல்வேறு வங்கிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.