மார்ச் மாதத்தில் சுமார் 86 லட்சத்து 82 ஆயிரம் மக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில், 86 லட்சத்து 82 ஆயிரத்து 457 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட, மார்ச் மாதத்தில் 67 ஆயிரத்து 449 பயணிகள் மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணித்துள்ளனர்.
மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து, இதுநாள் வரையிலான எண்ணிக்கையில், இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கடந்த மாதம் 4-ஆம் தேதி 3 லட்சத்து 34 ஆயிரத்து 710 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு பயன்படுத்தி 34 லட்சத்து 62 ஆயிரத்து 83 பயணிகளும், பயண அட்டைகளை பயன்படுத்தி 37 லட்சத்து 64 ஆயிரத்து 44 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 54 ஆயிரத்து 849 பயணிகளும், குழு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 5 ஆயிரத்து 512 பயணிகளும், சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்தி 13 லட்சத்து 95 ஆயிரத்து 969 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.