இந்தியா, கயானா நாட்டிற்கு இரண்டு டோர்னியர்- 228 விமானங்களை வழங்கியுள்ளது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு டோர்னியர்- 228 விமானங்களை நேற்று இந்தியா கயானா பாதுகாப்புப் படைக்கு வழங்கியது.
அந்த விமானங்கள் இரண்டு போயிங் சி-17 குளோப்மாஸ்டர் இராணுவ போக்குவரத்து விமானங்களில் நேற்று மாலை செட்டி ஜெகன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன என அந்நாட்டின் அதிபர் முகமது இர்ஃபான் அலி தெரிவித்துள்ளார்.
இரண்டு இன்ஜின்கள்கொண்ட இந்த டோர்னியர்-228 ரக விமானம், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் தயாரிக்கப்படுவது.
16.56 மீட்டர் உயரமும் 4.86 மீட்டர் நீளமும்கொண்ட இந்த டோர்னியர்-228 ரக விமானத்தில் கிட்டத்தட்ட 19 வீரர்கள் பயணிக்கலாம். மேலும் இந்த டோர்னியர்-228 ரக விமானம், 3,900 கிலோ எடையும் 1,885 கிலோ எரிபொருள் திறனும்கொண்டது.
அதிநவீன வசதிகள்கொண்ட இந்த டோர்னியர்-228 ரக விமானம், கண்காணிப்பு மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற பணிகளுக்கு இந்திய கடற்படையின் உளவுப் பிரிவினர் மற்றும் கடலோர காவல் படைகளால் பயன்படுத்தப்படுகிறது.
இது இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான கதவுகளைத் திறக்கிறது, குறிப்பாக பாதுகாப்பு, அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. இந்தியா இதற்கு முன்னர் மாலத்தீவு மற்றும் இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கு இதேபோன்ற விமானங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.