ராமநவமியை முன்னிட்டு 2024 ஐபிஎல் தொடரின் 2 போட்டிகளில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
2இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.
🚨 NEWS 🚨
KKR-RR, GT-DC games rescheduled.
Details 🔽 #TATAIPL https://t.co/O56PJaKKv4
— IndianPremierLeague (@IPL) April 2, 2024
ராமநவமி கொண்டாட்டமும், தேர்தல் தேதிகளும் கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை மாற்றுவதற்கான இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஒரு ஐபிஎல் போட்டிக்கான தேதியை மாற்றுவதற்கு, பரிசீலனை செய்துவருதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் நிர்வாகம் ராம நவமியை முன்னிட்டு, ஏப்ரல் 17 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அதேபோல் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெறவிருந்த குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை ஏப்ரல் 17 ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.