போர்ச்சுகல் குடியரசின் பிரதமராக பதவியேற்ற லூயிஸ் மாண்டினீக்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகல் பொதுத்தேர்தல் கடந்த மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் லூயிஸ் மாண்டினீக்ரோ தலைமையிலான மத்திய-வலது ஜனநாயகக் கூட்டணி (AD) 80 இடங்களை வென்றது. இதனையடுத்து புதிய பிரதமராக லூயிஸ் மாண்டினீக்ரோ பதவியேற்றுள்ளார்.
அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், போர்ச்சுகல் குடியரசின் பிரதமராக பதவியேற்ற லூயிஸ் மாண்டினீக்ரோவுக்கு வாழ்த்துகள்.
நமது நீண்ட கால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Warm Congratulations to Mr. Luís Montenegro on being sworn in as the Prime Minister of the Portuguese Republic. Look forward to working together to further strengthen our long-standing bilateral ties.
— Narendra Modi (@narendramodi) April 3, 2024