புதுதில்லியில் ஆஸ்திரேலியாவின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் மார்க் ஹம்மண்ட், இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமாருடன் இன்று கலந்துரையாடினார்.
இரு நாட்டுப் படைகளுக்கு இடையே செயல் நடவடிக்கைகளை அதிகரித்தல், பயிற்சி பரிமாற்றம், தகவல் பகிர்வு உள்ளிட்ட இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து அப்போது அவர்கள் விவாதித்தனர்.
முன்னதாக, தேசிய போர் நினைவிடத்தில் துணை அட்மிரல் மார்க் ஹம்மண்ட் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தெற்கு பிளாக்கில் இந்திய கடற்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பாதுகாப்புப் படைத் தளபதி, விமானப்படை தளபதி மற்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆகியோரை ஆஸ்திரேலிய கடற்படைத் தளபதி, புதுதில்லியில் சந்திக்கவுள்ளார்.
மார்க் ஹம்மண்ட் இந்திய கடற்படையின் தெற்கு கடற்படைப் பிரிவு, (கொச்சி), மேற்கு கடற்படைப் பிரிவு (மும்பை) ஆகியவற்றை பார்வையிட உள்ளார். அவர் அங்குள்ள தளபதிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.