70 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வரக்கூடிய ’12 பி பான்ஸ்-புரூக்ஸ்’ (Comet 12b Pance-Brooks) என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது.
புரியாத புதிராக பல அதிசயங்களை கொண்டுள்ளது தான் பிரபஞ்சம். பிரபஞ்சம் கொண்டுள்ள பல அதிசயங்களில் ஒன்றாக தான் நம் பூமியும் உள்ளது.
அதேபோல் பரந்து விரிந்த வானமும் பல அதிசயங்களை கொண்டுள்ளது. அதனை தேடி கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் பல நூறு வருடங்களாக முயற்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் வானில் வால்நட்சத்திரம் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வானில் தோன்றக் கூடியது. வால் நட்சத்திரம் என்பது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன ஒரு விண் பொருள் தான் வால் நட்சத்திரம்.
இந்த வால் நட்சத்திரம் சூரியனின் உட்புறமண்டலத்தின் அருகில் வரும் போது, சூரியனின் வெப்பத்தால் பனி ஆவியாகி, அதன் கருவை சுற்றி ஒளிரும் தன்மை கொண்ட வாயு, தூசியால் ஆன வால் போன்ற அமைப்பில் தோன்றுகிறது. இது ஒரு அரிதான நிகழ்வாகவும், வானியல் அதிசயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், 70 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வரக்கூடிய ’12 பி பான்ஸ்-புரூக்ஸ்’ (Comet 12b Pance-Brooks) என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது.
சுமார் 30 கி.மீ. நீளமுள்ள இந்த வால்நட்சத்திரம் தற்போதே தெரியத் தொடங்கிவிட்டதாகவும், தொலைநோக்கி உதவியுடன் இதனை பார்க்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு அடிவானத்தில் ஏற்படும் இந்த வால்நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வால்நட்சத்திரமானது, 1385-ஆம் ஆண்டு சீனாவிலும், 1457-ஆம் ஆண்டு இத்தாலியிலும் தொலைநோக்கியால் பார்த்ததாக சான்றுகள் உள்ளன. மேலும், இந்த வருடம் வால் நட்சத்திரம் ஜூன் மாதம் மிக நெருக்கமாக பூமிக்கு அருகில் வரும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நிகழ்விற்கு பிறகு, 2095-ஆம் ஆண்டு தான் இந்த வால்நட்சத்திரம் வானில் தோன்றும் என்றும் தெரிவித்துள்ளனர்.