சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு!
Sep 12, 2026, 10:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 04:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 13 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பிஜப்பூர் மாவட்டத்தின் கோர்சோலி வனப் பகுதியில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் போஸீஸ் படை மற்றும் அதன் கமாண்டோ பிரிவான கோப்ரா ஆகியவை இணைந்து கடந்த 1ம் தேதி முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனத்தில் பதுங்கி இருந்த நக்சலைட்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டை அடுத்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.  இதில் 133 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடந்திருக்கும் பிஜப்பூர் மாவட்டம், பஸ்தர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு 2024 பொதுத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு வரும் 19-ம் தேதி நடக்க உள்ளது.

இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஸ்தர் பகுதியின் ஐஜி சுந்தர்ராஜ்,

“நக்சல்களுக்கு எதிரான பெரிய நடவடிக்கைகளில் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி இரவு முதல் பிஜப்பூர் மாவட்டத்தின் லேந்தரா, கோர்சோலி வனப்பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் 13 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பெரிய எண்ணிக்கையில் நக்சல்கள் காயமடைந்திருப்பதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடந்த இடம், நக்சலைட்டுகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இருந்துள்ளது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினரின் 16 புதிய முகாம்கள் அமைக்கப்பட்டன. இதன்மூலம், பாதுகாப்புப் படையினர் மிகவும் நெருக்கமாக கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர். அவர்களுக்கு இரவிலும் தெரியக்கூடிய பைனாகுலர்கள், புதிய வகை ஆயுதங்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டன. அவர்கள் மூலம்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நக்சலைட்களின் இரண்டாவது பெரிய படைப்பிரிவான மேற்கு பஸ்தரின் கங்கலூர் ஏரியா கமிட்டி எனும் நக்சல் அமைப்பு செயல்பட்டு வந்துள்ளது. பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் நேற்று 10 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து இன்று காலை மேலும் 3 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

Tags: Number of Naxalites shot dead in Chhattisgarh increases to 13!
Share
Tweet
SendShare
Previous Post

வானில் நிகழும் அதிசயம் : 70 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்!

Next Post

டெல்லி கேபிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies