கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையின் குறிப்பிடத்தக்க சாதனையாக 94% ரயில் நெட்வொர்க் மின் மயமாக மாற்றப்பட்டுள்ளது.
2014 – 24 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்புத் துறைகள் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்புத் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எதிர்க்கட்சிகள் கூட ஒப்புக்கொள்கின்றன.
அந்த வகையில் இந்தியாவின் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து பார்ப்போம்.
நெடுஞ்சாலைத் துறையின் முன்னேற்றங்களில், ரயில்வே நெட்வொர்க் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமான மாற்றங்களை கொண்டுள்ளது.
ரயில்வே துறையை எந்த அளவிற்கு நவீன மயமாக்க முடியுமோ அந்த அளவிற்கு நவீன மயமாக்குவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது, அதற்காக நிதியும் பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் ஒதுக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் தேஜஸ், வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையின் குறிப்பிடத்தக்க சாதனையாக 94% ரயில் நெட்வொர்க் மின் மயமாக மாற்றப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டில் நாட்டின் ரயில்வே நெட்வொர்க்கில் 21,801 கி.மீ தூரம் மட்டுமே மின்மயமாக இருந்தது. ஆனால் தற்போது, நாட்டின் 61,000 கி.மீ.க்கும் அதிகமான ரயில்வே நெட்வொர்க் மின் மயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக ₹43,346 கோடியை ஒதுக்கீடு செய்து மின்மயமாக்கப்பட்டது. மின்மயமாக்கல் மட்டுமின்றி புதிய ரயில் பாதைகள் அமைப்பதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பாரத பிரதமர் மோடி அரசின் ஆட்சிக் காலத்தில் மொத்தம் 25,871 கி.மீ புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன.
2014 ஆம் ஆண்டில் ரயில்வே துறைக்கு சுமார் ₹29,000 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 2024-25 ஆண்டில் பட்ஜெட் கிட்டத்தட்ட எட்டு மடங்கு உயர்ந்து ₹2.90 லட்சம் கோடியாக உள்ளது.
புதிய பாதைகள் மற்றும் மின்மயமாக்கல் திட்டங்களில் முதலீடுகள் மட்டுமின்றி, ரயில் நிலைய மறுசீரமைப்பு முயற்சிகளிலும் பிரதமர் மோடியின் ஆட்சி கவனம் செலுத்துகிறது.
சமீபத்தில், பிரதமர் மோடி நாடு முழுவதும் 550 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை அமிர்த பாரத் நிலையங்களாக மேம்படுத்த ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.