பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, பிரதமர் மோடி ஏழைகள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பணிகளை செய்துள்ளார். 370வது பிரிவை நீக்கியதன் மூலம் காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பணியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளதாகவும், தேசத்தை பாதுகாப்பாகவும் வளமாகவும் அவர் மாற்றியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியது நரேந்திர மோடி அரசுதான் என்று கூறினார். ஆனால் அயோத்தி கோயில் விழாவில் பங்கேற்காமல் அரசியல் ஆதாயத்திற்காக அகிலேஷ் யாதவ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பிரதமராக மோடி 3வது முறையாக பதவியேற்பார் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.