கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்ஆகிய தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
நேற்று கோயம்புத்தூர் தொகுதியில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை பொது மக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய தொகுதியில் அண்ணாமலை கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.