2024 மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் தபால் வாக்குகளைப் பெறும் பணி தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனையொட்டி, 85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் வாக்குகளை பெறும் பணி தொடங்கியுள்ளது. அவர்களது வீட்டிற்கு சென்று தேர்தல் அதிகாரிகள் வாக்குகளை பெற்று வருகின்றனர். அதற்கான பணியை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், சென்னை, விழுப்புரம், திருச்சி, கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தபால் வாக்குகளைப் பெறும் பணி நடைபெறும் பணி நடைபெற்று வருகிறது.
85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.