தேர்தல் விதி மீறல் தொடர்பாக சி-விஜில் (cVIGIL) செயலி மூலம் தமிழகத்தில் 1,694 புகார்கள் பதிவாகியுள்ளன.
தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் (cVIGIL) என்ற செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. இந்த செயலியில் தோ்தல் நடத்தை விதிகளை மீறுவதை புகைப்படம் அல்லது விடியோ பதிவு செய்து அனுப்பலாம்.
இதில் அனுப்பக்கூடிய புகாா்கள், தகவல்கள் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பப்படும். அவா்கள் புகாரின் உண்மைத் தன்மையை குறித்து ஆராய்ச்சி செய்வர் .
அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, அதிக அளவு புகாா்கள் பெறப்பட்ட மாவட்டமாக கரூா் மாவட்டம் உள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து அளிக்கப்பட்ட புகாா்களில் 372 உண்மைத் தன்மையுடவை என கண்டறியப்பட்டுள்ளது.
2 வது இடத்தில் சென்னை மாவட்டம் உள்ளது. சென்னை மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், 209 புகாா்கள் சரியானவை என கண்டறியப்பட்டுள்ளது. 3 வது இடத்தில் வேலூா் மாவட்டம் உள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து அளிக்கப்பட்ட புகாா்களில் 116 உண்மைத் தன்மையுடவை என கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு சில மாவட்டங்களில் இருந்து சரியான ஆதாரங்களுடன் புகாா்களே வரவில்லை என்று தமிழக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருவாரூா், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் இருந்து ஒருசில புகாா்கள் வந்துள்ளது. இருப்பினும் அவை உரிய ஆதாரங்களுடன் இல்லாத காரணத்தால் கைவிடப்பட்டுள்ளன. எனவே , இந்த இரு மாவட்டங்களும் புகாா்களே பதிவாகாத மாவட்டங்களாக உள்ளன. இதுவரை மொத்தம் உண்மைத் தன்மையுடைய 1,694 புகார்கள் பதிவாகியுள்ளன.