சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும், வந்தே பாரத் ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை எழும்பூரிலிருந்து நாகா்கோவிலுக்கு, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில், வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை இயக்கப்படும்.
இதேபோல், திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில், ரயில் இயக்கப்படுகிறது. இது ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் மே 26-ஆம் தேதி வரை இயக்கப்படும்.
மறுமாா்கமாக மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையே, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இவை ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரை இயக்கப்படும்.
மேலும், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு காலை 10.55 மணிக்கு புறப்படும் மெமு எக்ஸ்ப்பிரஸ் ரயிலும், மறுமாா்கமாக கோவையிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் மெமு எக்ஸ்பிரஸ் ரயிலும், வியாழக்கிழமை ரத்து செய்யப்படும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் மாலை 4.45 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயிலும், மறுமாா்க்கமாக கோவையில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயிலும், வரும் சனிக்கிழமை ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.