சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் – 171 படத்தின் பெயர் டீசர் புரோமோ வீடியோவுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 171’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தலைவர் – 171 படத்தின் பெயர் டீசர் புரோமோ வீடியோவுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம், லியோ படத்தின் பெயர் அறிவிப்புக்கு புரோமோ வீடியோ தயாரித்த லோகேஷ், தலைவர் – 171 படத்திற்கு என்ன செய்யப்போகிறார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.