தைவான் பூகம்பம்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு - மீட்புப் பணி தீவிரம்!
Oct 27, 2026, 07:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தைவான் பூகம்பம்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு – மீட்புப் பணி தீவிரம்!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில், 7.4 ரிக்டர் அளவில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கட்டட இடிபாடுகளில், சிக்கி உள்ளவர்களை உயிருடன் மீட்கும் பணியில், மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தைவான் தலைநகர் தைப்பேவில், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.28 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த பூகம்பம் பூமிக்கடியில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன் அதிர்வுகள் தைவான் மட்டுமின்றி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு, தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பூகம்பத்தால், கிழக்கு ஹுவாலியன் உட்பட பல்வேறு நகரங்களில், கட்டடங்கள் குலுங்கின.

பல்வேறு கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், சில கட்டடங்கள் சரிந்து விழுந்தன. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நகரங்களில், மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

சேதமடைந்த பகுதிகளில், மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை உயிருடன் மீட்கும் பணியில், மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு சில பகுதிகளில், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெறுகிறது.

பூகம்பத்தால், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Tags: earth quaketaiwantaipeitaiwan earthquake9 death
Share
Tweet
SendShare
Previous Post

வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் கே.சுரேந்திரன்!

Next Post

விரைவில் தொடங்கும் ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தின் டீசர் படப்பிடிப்பு!

Related News

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

Load More

அண்மைச் செய்திகள்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies