சென்னை பல்லாவரத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருநீர்மலை. இங்கு 200 அடி உயரத்தில் அழகிய மலை உள்ளது. மலையின் அடிவாரத்தில் அருள்மிகு பெருமாள் சந்நிதியும், மலைமேல் மூன்று சன்னிதிகளும் உள்ளன.
கோவில் அடிவாரத்தில், நீலமுகில் வண்ணன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தனிச்சன்னதியில் அணிமாமலர் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மலைமேல், சாந்த நரசிம்மன், ரங்கநாதன், திருவிக்ரமன் ஆகியோர் சேவை சாதிக்கின்றனர். இங்கு, அதாவது ஒரே தலத்தில் 4 பெருமாள்கள் பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு ஆகும்.
இந்த நிலையில், ரெங்கநாதப் பெருமாள் கோவிலில் பங்குனி விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில், அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.