2024 ஐபிஎல் தொடரின் 17-வது போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் தொடரின் 17-வது போட்டி இன்று மாலை 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதேபோல் நரேந்திர மோடி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்று, 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
மேலும் இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 56% வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், பஞ்சாப் கிங்ஸ் அணி 44 % வெற்றி வாய்ப்பு உள்ளதாக இணைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.