மதுரை சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி, நடைபெறவுள்ள நிலையில், 4-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை, அன்றைய தினம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, அரசு பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, ஏப்ரல் 23-ஆம் தேதி நடக்கவிருந்த சமூக அறிவியல் தேர்வு தேதியை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், பள்ளி கல்வித்துறை இயக்குநரின் அனுமதி பெற்று, மதுரை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படாது என்றும், மாறாக அந்த தேர்வு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் என்றும் மதுரை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.