அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நிலவுக்கு நிலையான நேரத்தை உருவாக்க நாசாவுக்கு உத்தரவு விடுத்துள்ளது.
எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்ப பெற முடியாதது நேரமும் காலமும். ஒரு முறை ஒரு வினாடி முடிந்துவிட்டது என்றால் அது மீண்டும் நமக்கு கிடைக்காது. அதனால் தான் காலம் பொன்போன்றது என்ற பொன்மொழி உள்ளது.
இப்படி விலைமதிப்பற்ற இந்த நேரம் பூமியில் மட்டும் உள்ளதா அல்லது மற்ற கோல்களிலும் உள்ளதா என்பது தெரியாது. அனைவருக்கும் மிகவும் பிடித்த வானில் அழகை தோன்றும் நிலவில் இப்போது நேரம் என்ன? என்பதும் நமக்கு தெரியாது.
இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நிலவுக்கு நிலையான நேரத்தை உருவாக்க நாசாவுக்கு உத்தரவு விடுத்துள்ளது. இதன்படி “ஒருங்கிணைந்த லூனார் டைம்” (எல்.டி.சி) என்ற பெயரில் இதை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து நாடுகளும் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்று போட்டியிடுவதை கருத்தில் கொண்டு, விண்வெளியில் சர்வதேச விதிமுறைகளை அமைக்கும் அமெரிக்காவின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது கொண்டு வரப்பட்டுள்ளதாக வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தின் (OSTP) தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” நாசா, அமெரிக்க அரசு அமைப்புகளுடன் இணைந்து “ஒருங்கிணைந்த சந்திர நேரம்” (எல்.டி.சி) அமைப்பதற்கான திட்டத்தை இரண்டு ஆண்டுகளில் கொண்டு வர வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
2023-யில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சந்திரனுக்கு அதன் சொந்த நேர மண்டலத்தை வழங்குவதற்கான இதே போன்ற திட்டங்களை அறிவித்தது. இதன்படி 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நெதர்லாந்தில் உள்ள பல்வேறு விண்வெளி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது இந்த யோசனை தோன்றியது.
அதேபோல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான சொந்த நேர மண்டலம் இல்லை என்றாலும், அது ஒருங்கிணைக்கப்பட்ட யுனிவர்சல் டைம்மில் தற்போது இயங்குகிறது.