அக்ஷய பாத்திரம் குழுவுக்கு ஐ.நா. அங்கீரம் கிடைத்துள்ளதற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது X தளத்தில், நான்கு பில்லியன் பேருக்கு இலவச உணவை வழங்கி அற்புதமான மைல்கல்லை எட்டியதற்காக அக்ஷய பாத்திரம் குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களுக்கு கிடைத்துள்ள ஐ.நா. அங்கீகாரம் மிகவும் தகுதியானது.
அக்ஷய பாத்ராவின் அணுகுமுறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மனிதகுலத்தின் ஊட்டச்சத்து பிரச்னையை தீர்க்கும் ஒரு புதுமையான வழியாகும். சென்னையில் ஏற்கெனவே நவீன சமையலறையை கட்டியுள்ள அக்ஷய பாத்ரா ஃபவுண்டேஷன், பல ஆயிரம் ஏழை குழந்தைகளுக்குப் பயன்படும் வகையில், தனது இலவச உணவு வழங்கல் சேவையை விரைவில் தொடங்கும் என நம்புகிறேன் என ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.
"நான்கு பில்லியன் பேருக்கு இலவச உணவை வழங்கி அற்புதமான மைல்கல்லை எட்டியதற்காக @AkshayaPatra முழு குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களுக்கு கிடைத்துள்ள @UN அங்கீகாரம் மிகவும் தகுதியானது. அக்ஷய பாத்ராவின் அணுகுமுறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மனிதகுலத்தின் ஊட்டச்சத்து…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) April 4, 2024