திமுக ஆட்சிக்கு வந்து 33 மாதங்களில், திமுக அமைச்சர்கள், திமுக மேயர், திமுக கவுன்சிலர்கள் நிறைவேற்றாத நலத்திட்டங்களை, புதிதாக வரும் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் எப்படி நிறைவேற்றுவார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார்.
நாமக்கல் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும், பாஜக மாநிலத் துணைத்தலைவர் K.P. இராமலிங்கத்தை ஆதரித்து, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பரமத்தி மற்றும் வெண்ணந்தூர் பகுதிகளில், வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: வரும் பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி, 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. கடந்த பத்து ஆண்டுகளாக, பிரதமர் மோடியின் நல்லாட்சியில், நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகள், நம் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தவும், அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கவும், அதில் நமது நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியும் பங்கேற்கவும், பாஜக வேட்பாளர் வெற்றி பெற வேண்டியது அவசியம்
கடந்த பத்து ஆண்டுகளில், நாமக்கல்லுக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தவும், மத்திய அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்று கண்காணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாததாலும், நாமக்கல்லின் வளர்ச்சி தேங்கி நிற்கிறது.
தற்போது நடைபெறவிருக்கும் தேர்தல், நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல். நமது கூட்டணியில் பிரதமர் நரேந்திர மோடி என்ற வலிமையான தலைவர் இருக்கிறார். எதிர்க் கட்சிகள், யார் பிரதமர் என்பதே தெரியாமல் இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து 33 மாதங்களில், திமுக அமைச்சர்கள், திமுக மேயர், திமுக கவுன்சிலர்கள் நிறைவேற்றாத நலத்திட்டங்களை, திமுக பாராளுமன்ற உறுப்பினரும் நிறைவேற்றப் போவதில்லை. எனவே, இந்தத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பது, பொதுமக்களுக்கு எந்தப் பலனையும் தரப் போவதில்லை.
நாமக்கல், விவசாய பூமி மட்டுமல்ல, நெசவாளர்கள், லாரித் தொழில், முட்டை என பல தொழில்களுக்குப் பெயர் பெற்ற தொகுதி. நாடு முழுவதும் பிரபலமான தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர், தொகுதியின் வளர்ச்சிக்காகச் செயல்படுபவராக, திட்டங்களைக் கேட்டுப் பெறும் அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும்.
பாஜக வேட்பாளர் K.P. இராமலிங்கம், கடந்த 1980 ஆம் ஆண்டிலேயே சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து இரண்டு முறையும், பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாகப் பணி செய்தவர். மறைந்த முதலமைச்சர்கள் அமரர் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி ஆகியோரிடம் அரசியல் பயின்றவர். மக்களுக்குத் தேவை என்ன என்பதை நன்கு உணர்ந்தவர். அவரது அரசியல் அனுபவத்தை, நாமக்கல் மக்கள் பயன்படுத்திக் கொண்டு பலன் பெற வேண்டும்.
கடந்த பத்து ஆண்டுகளில், பிரதமர் மோடி அரசு, நாமக்கல் மாவட்டத்திற்கு மட்டும், 85,505 விவசாயிகளுக்கு, வருடம் ரூ.6,000 என ரூ.30,000 வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைத்துள்ளது. மோடி வீடு திட்டத்தில், 27,947 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 11 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று, நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீட்டைப் பயன்படுத்தியவர்கள் 1,21,516 பேர். குழாய்க் குடிநீர் வசதி, 3,19,642 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, முத்ரா கடனுதவி, சுவநிதி கடனுதவி என பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள், நாமக்கல் மாவட்டத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு மட்டும் ரூ. 11 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், திமுக அமைச்சர் உதயநிதி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று கூறுகிறார். பிரதமர் மக்களுக்கு நேரடியாக வழங்குகிறார். உதயநிதி, கோபாலபுரக் குடும்பத்திற்குப் பணம் வரவில்லை என்கிறார். தாத்தா, அப்பா பெயரை வைத்து அரசியலுக்கு வந்தவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.
கடந்த 33 மாத கால திமுக ஆட்சியில், விடியல் என்று கூறி, மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம், சொத்து வரி, பால் விலை, என அனைத்தையும் உயர்த்தியிருக்கிறார்கள். கொடுத்த 511 தேர்தல் வாக்குறுதிகளில், 20 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. தற்போது, பாராளுமன்றத் தேர்தலுக்கு, மீண்டும் அதே வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் திமுகவுக்கு வாக்களித்தால், மக்களை சுடுகாட்டுக்குத் தான் அழைத்துச் செல…