சிறுபான்மையினரை மதிப்பதும், ஆதரிப்பதும் பாரத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல் நமது சித்தாந்தம் ‘சர்வ மாதா சாம பாவ’ கொள்கையின் படி அனைத்து மதங்களையும் சமமாகவும், மிகுந்த மரியாதையுடனும் நடத்துவதாக உள்ளது.
‘ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி’ யின் படி ஒரே ஒரு உண்மை பல வடிவங்களால் பார்க்கப்படுகிறது என்ற கொள்கையே அரசாங்கத்தின் செயல்பாட்டின் அடித்தளமாக அமைந்துள்ளது.
நமது பாரத நாட்டின் பல நூற்றாண்டு அர்ப்பணிப்பு மற்றும் பல நூற்றாண்டு பாரம்பரியத்தின் வலிமையைப் பெற்று, இந்தியாவின் சிறுபான்மையினரின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள 150 கோடி மக்கள் தொகையில் ஜைனர்கள், பார்சிகள், பௌத்தர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் உட்பட இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் 20 சதவீதமாக உள்ளனர்.
இதில், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர்களாக உள்ளனர். பாரத பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு பதவியையேற்றதில் இருந்து சிறுபான்மை சமூகங்களை இணைக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்தியாவின் உள்ள மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 14.23 சதவீதமாக இருந்தாலும், கிறிஸ்தவர்கள் 2.30 சதவீதமாக உள்ளனர்.
2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலக இஸ்லாமிய சூஃபி மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்றியதும், இந்தூரில் உள்ள தாவூதி போஹ்ரா மசூதிக்குச் சென்றதும், போஹ்ராக்கள் மற்றும் சூஃபி முஸ்லிம் சமூகங்களுடன் தொடர்புகொள்வதற்கான பிரதமர் மோடியின் முயற்சிகளாக உள்ளது.
மேலும் மத்திய அரசின் முதன்மையான மலிவு விலை வீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பயனாளிகளின் 35% சிறுபான்மையினர் உள்ளனர். அதேபோல் நாடு முழுவதும் சிலிண்டர் இணைப்பு வழங்கும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளின் 37% சிறுபான்மையினர் உள்ளனர்.
மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிகளுக்காக உருவாக்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா பயனாளிகளில் 30% சிறுபான்மையினர் உள்ளனர்.
அதேபோல் இஸ்லாமிய நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், உலக அமைதிகாக பிரச்சாரம் செய்யவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி, உலகெங்கிலும் உள்ள பல இஸ்லாமிய நாடுகள் அவரைக் கௌரவித்துள்ளன.
அதேபோல் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று பல தேவாலயங்களுக்கு சென்று கிறிஸ்தவ சமூகத்துடன் பண்டிகையை கொண்டாடினார்.
இந்தியாவின் மாநிலங்களான நாகாலாந்தில் 85 சதவீதத்துக்கும் அதிகமான கிறிஸ்தவர்களும், மேகாலயாவில் 75 சதவீதத்துக்கும் அதிகமான கிறிஸ்தவர்களும் உள்ளனர், இந்த இரண்டு மாநிலங்களும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியா மீதான பார்வையை ஏற்றுக்கொண்டுள்ளன.
கேரளாவில் மற்ற எந்த அரசியல் கட்சிகளையும் விட இன்று பாரதிய ஜனதா கட்சி அதிக எண்ணிக்கையிலான கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
மேலும் முஸ்லிம் சிறுபான்மை பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் விதமாக முத்தலாக் ஒழிக்கப்பட்டது. அதே நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கியுள்ளது.
கடந்த தசாப்தத்தில் தொடர்ச்சியான கொள்கைகள் மற்றும் சட்டங்களின் மூலம், இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்பதை மோடி அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
மேலும் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம், மத்திய நிதியுதவி திட்டம் ஆகிய திட்டங்கள் சிறுபான்மையிரின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
இது கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற பல்வேறு துறைகளிக்கு வழங்குகிறது.
கூடுதலாக, சிறுபான்மை விவகார அமைச்சகம் பிரதான் மந்திரி விராசத் கா சம்வர்தன் (PM VIKAS) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சிறுபான்மை சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு வாழ்நாள் முழுவதும் ஆதரவளிக்கும் ஏற்கனவே உள்ள ஐந்து திட்டங்களை ஒருங்கிணைக்கிறது.
இந்த திட்டங்கள் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது அதேபோல் பல்வேறு மானியங்களை சரியாய் பயன்படுத்துவதற்கான பதினைந்து நிதிக் கமிஷன்களுடன் இன்னக்கி செயல்படுகிறது.
தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம் (NMDFC) குறிப்பிடத்தக்க கடன் வழங்கியுள்ளது. 2022-23 நிதியாண்டில் 881.70 கோடி ரூபாய் கடன்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் 2.05 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மேலும் இதில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2024-25 இடைக்கால பட்ஜெட், 2023-24 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இருந்து ரூ.574.27 கோடி அதிகரிப்புடன், சிறுபான்மை விவகார அமைச்சகத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை காட்டுகிறது.
சிறுபான்மையினர் நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 3183.24 கோடியில், ரூ. 1575.72 கோடி கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மை சமூகங்களின் கல்வியில் மோடி அரசாங்கத்தின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்நிலையில் மக்களவை தேர்தல் நெருங்கிவருகிறது. இதில் பாஜக 400 இடங்களிலும் வெற்றி பெற சிறுபான்மை மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்தியா வளர்ந்த நாடாக மாறப் பாடுபடும் நேரத்தில், நமது சிறுபான்மையினரை சமூகப் பொருளாதார ரீதியில் எப்படி உயர்த்துவது என்பதற்கு உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது.
நம் பாரதத்தின் கூட்டு முன்னேற்றத்திற்காக சிறுபான்மை மக்களின் திறன்களை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பதில் இந்தியா மற்ற நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது.