பிரசித்தி பெற்ற திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோவில், சித்திரை விஷூ திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரசித்தி பெற்ற குற்றாலநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான, சித்திரை விஷூ திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வரும் 8-ஆம் திருத்தேரோட்டமும், வரும் 11-ஆம் தேதி நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், வரும் 12-ஆம் தேதி பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபையில் நடராஜமூர்த்திக்கு பச்சைமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தாண்டவ தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி சித்திரை விஷூ தீர்த்தவாரியும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.