சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் -171 படத்துக்கு ‘கழுகு’ என்று தலைப்பு பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 171’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தலைவர் -171 படத்துக்கு ‘கழுகு’ என்று தலைப்பு பெயர் வைக்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியானது. இந்த டைட்டில் பெயரை லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
விக்ரம், லியோ படத்தின் பெயர் அறிவிப்புக்கு புரோமோ வீடியோ தயாரித்த லோகேஷ், தலைவர் – 171 படத்திற்கு என்ன செய்யப்போகிறார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடைய தலைவர்- 171 படத்தில் ரஜினியுடன் இந்தி நடிகர் ஷாருக்கானை இணைந்து நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டதாகவும் அதனை ஷாருக்கான நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் தலைவர் 171- படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இப்படத்தில் நடிக்க ரன்வீர் சம்மதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.