பிரதமர் மோடியே மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும் என்று பாரத நாட்டு மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.
“தேர்தல் நடைபெறுதற்கு முன்பே இவர் தான் எங்கள் பிரதமர். இவரை 3 வது முறையாக 400 க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்துக்கு இந்த பாரத நாட்டை ஆள வெற்றி வாகை சூடி அனுப்பி வைப்போம் ” என்று எல்லா தரப்பு மக்களும் ஒரே குரலில் சொல்கிறார்கள் என்றால் அதில் ஏதோ மிகப் பெரிய உண்மை இருக்கிறது என்று தான் பொருள்.
அப்படியென்ன பிரதமர் நரேந்திர மோடியிடம் இருக்கிறது என்ற கேள்வி எழுவது இயற்கை. சரியான பதிலை தெரிந்து கொண்டால் மோடியின் தன்னலமற்ற தேசப் பக்தியும் இந்த தேசத்தின் மக்கள் மீது அவருக்கிருக்கும் எல்லையற்ற அன்பும் புரியும்.
எடுத்துக்காட்டாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் முக்கியமான 10 அம்சங்கள் என்ன? என்ன ? என்று பார்ப்போம் .
1. அரசுக் கொள்கைகளில் அசைத்துப் பார்க்க முடியாத உறுதிப்பாடு மற்றும் அந்த உறுதியில் நிலையாக நிற்கும் கம்பீரம் .
2. எடுத்த அரசுக் கொள்கையை குறிப்பிட்ட நேரத்திற்குள் மிகச் சரியான முறைகளில் மிகச் சரியாக நடைமுறைப்படுத்தும் செயல்வீரம் .
3. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றதாக நாட்டின் உள்கட்டமைப்பில் காலத்துக்கேற்ற வகையில் சீரமைத்த தொலைநோக்கு பார்வை மற்றும் சிறந்த முதலீட்டு சீர்திருத்தங்களை நடைமுறை படுத்திய வேகம்
4. முழுமையான வெளிப்படைத்தன்மையை அரசு மற்றும் அரசாங்கத்தில் கொண்டுவந்து குறிப்பாக E -AUCTION முறையை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்திய நெஞ்சுரம் .
5. மத்திய அரசின் அமைச்சர்களுக்கிடையே யான துறை சார்ந்து எழும் கருத்து முரண்பாடுகளை நீக்கி ஒருமித்த கருத்தை உருவாக்கவும் , துறை சார்ந்த முடிவுகளை விரைந்து எடுக்கவும் ஒருங்கிணைப்பு முறையை ஏற்படுத்தி அதை சாத்தியமாகிய விதம் .
6. நாட்டின் நிர்வாக விதிகளை கவனமாகப் பின்பற்றுவதற்குப் பணியமர்த்தப்பட்ட உயர் அதிகாரிகளை இந்திய ஆட்சிப் பணியின் மீது நம்பிக்கை ஏற்பட செய்ததோடு மட்டும் இல்லாமல் அறிவார்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளிடம் இருந்து, நாட்டின் முன்னேற்றத்துக்கான நவீனமான சிந்தனைகளைக் கேட்டு பெறுவதோடு ,எந்த வித அரசியல் தலையீடு ,குறுக்கீடு இல்லாமல் அவர்களைச் சுதந்திரமாக செயல்பட அனுமதியளித்து, அவர்களையும் அவர்கள் பணிகளையும் மதித்து ஆட்சி நடத்தும் அழகு.
7. வளர்ந்த நாடாக பாரதம் முன்னேற்றமடைய , அடிப்படை கல்வி, பொது சுகாதாரம், நீர்மேலாண்மை , எரிசக்தி மற்றும் சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து மக்களுக்காக ஒய்வின்றிப் பணி செய்யும் தன்மை .
8 ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் ஒவ்வொரு விதமான கோரிக்கைகள் இருக்கும் சூழலில் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் காலம் அறிந்து நிறைவேற்றும் நிர்வாகத் திறமை.
9 இந்தியா தன்னை தானே உயர்த்திக் கொண்டு உலகத்துக்கே வழிகாட்டும் விஸ்வ குரு ஆக விளங்க அயராது உழைக்கும் அர்ப்பணிப்பு
இவை கொஞ்சம் தான் . பிரதமர் மோடி சொன்னது போல் 2030 ஆம் ஆண்டுக்குள் ஜப்பானை விஞ்சி உலகளவில் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா நிச்சயம் இடம்பெற்று இருக்கும்.
இப்படி நிறைய நிறைய நாட்டை முன்னுக்கு கொண்டு வரும் ஒரே இலக்கோடு நாட்டின் காவலனாக விளங்குவதால் இந்த நாட்டு மக்கள் இப்போதே உரக்கச் சொல்லிவிட்டார்கள், மோடிதான் மீண்டும் பிரதமர் என்று.