பாரத பிரதமர் நரேந்திர மோடி நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காக விமான போக்குவரத்து துறைக்கு செய்த திட்டங்களை குறித்து பார்ப்போம்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி பாரதத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்திப் பல நன்மைகளைச் செய்துள்ளார்.
அதேபோல் பாரத பிரதமர் மோடி நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
அதில் பிரதமர் நரேந்திர மோடி நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காக விமான போக்குவரத்துத் துறைக்குச் செய்த திட்டங்களைக் குறித்துப் பார்ப்போம்.
2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தன. ஆனால் 2014 – 2013 வரை கடந்த ஒன்பது ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ள நிலையங்களின் எண்ணிக்கையே 74 ஆகா உள்ளது.
தற்போது இந்தியாவில் 148 விமான நிலையங்கள் உள்ளன. அதேபோல் தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்கள் ரூ.452,969 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் சென்னை விமான நிலையத்தில் ரூ.2467 கோடி செலவில் 220972 சதுர அடியில் புதிய ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் உதான் திட்டத்தின் கீழ், நெய்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர், வேலூர் ஆகிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.