கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி இந்தியாவைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவை மற்றொரு இந்திய வீரரான குகேஷ் தோற்கடித்தார்.
கனடாவில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியானது உலக சாம்பியனுடன் விளையாடப் போகும் வீரர், வீராங்கனைகள் யார் ? யார் ? என்பதைத் தீர்மானிக்கப் போகும் போட்டியாகவுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கு தனித்தனியாக நடைபெறும் இந்த போட்டியில் இரு பிரிவிலும் தகுதி பெற்ற 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு வீரரும், மற்ற வீரர்களுடன் தலா 2 முறை விளையாட வேண்டும். இது மொத்தமாக 14 சுற்றுகள் நடைபெறும். இதன் முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் நடப்பு சாம்பியனுடன் விளையாடுவர்.
இப்போட்டியின் முதல் சுற்றில் இந்தியா்களான பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் சந்தோஷ், வைஷாலி, கோனெரு ஹம்பி ஆகிய 5 பேரும் டிரா செய்தனா்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் இந்திய வீரர் விதித் சந்தோஷ், உலகின் 3ஆம் நிலை செஸ் வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த ஹிகரு நகமுராவுடன் விளையாடினார்.
இந்தப் போட்டியில் விதித் சந்தோஷ் கருப்பு நிற காய்களுடனும், ஹிகரு நகமுரா வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள். இதில் விதித் சந்தோஷ் தனது 29-வது நகர்த்தலுக்குப் பிறகு ஹிகரு நகமுரா தனது தோல்வியைத் தழுவினார்.
Results | Round 2 | #FIDECandidates
🇮🇳 Praggnanandhaa R 0-1 🇮🇳 Gukesh D
🇺🇸 Hikaru Nakamura 0-1 🇮🇳 Vidit Santosh Gujrathi
Ian Nepomniachtchi 1-0 🇫🇷 Alireza Firouzja
🇺🇸 Fabiano Caruana 1-0 🇦🇿 Nijat Abasov pic.twitter.com/SCBG7XUfUY— International Chess Federation (@FIDE_chess) April 5, 2024
கிளாசிக்கல் செஸ் போட்டியில் தொடர்ந்து 47 போட்டிகளில் தோல்வியே சந்திக்காத ஹிகரு நகமுரா தற்போது தோல்வியைச் சந்தித்துள்ளார். மேலும் இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவை மற்றொரு இந்திய வீரரான குகேஷ் தோற்கடித்தார்.