கடலில் வீசப்பட்ட 4.9 கிலோ தங்கம் மீட்பு : 3 பேர் கைது!
Sep 12, 2026, 09:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலில் வீசப்பட்ட 4.9 கிலோ தங்கம் மீட்பு : 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Apr 6, 2024, 03:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை அருகே, வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 4.9 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை வழியாக, மீன்பிடி படகு மூலம் ஒரு கும்பல் இந்தியாவுக்கு வெளிநாட்டு தங்கத்தைக் கடத்தி வருவதாக, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், ஏப்ரல் 3-ஆம் தேதி இரவில் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகுகளின் நடமாட்டத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் கண்காணித்தனர்.

4-ம் தேதி அதிகாலையில், நடுக்கடலில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை அடையாளம் கண்ட அதிகாரிகள், கடலோரக் காவல் படை கப்பல் மூலம் அந்தப்படகைத் துரத்திச் சென்று இடைமறித்தனர்.

இடைமறிக்கப்படுவதற்கு சற்று முன்பு, சந்தேகத்திற்கிடமான படகில் இருந்த நபர்களில் ஒருவரால் ஒரு சரக்கு கடலில் வீசப்பட்டதை அதிகாரிகள் கவனித்தனர். அந்த நாட்டுப் படகில் மூன்று பேர் இருந்துள்ளனர்.

இதற்கிடையே, இராமநாதபுரம் போலீசார் ஒரு படகில் வந்து  கடத்தப்பட்ட தங்கத்தை கடலுக்குள் வீசிய இடத்தைக் கண்டுபிடித்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

இந்நிலையில், நேற்று மதியம் கடத்தப்பட்ட தங்கம் கடற்பரப்பில் தீவிர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டது. ரூ.3.43 கோடி மதிப்புள்ள 4.9 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் ஒரு துண்டில் இறுக்கமாக கட்டப்பட்டு, கண்டுபிடிக்க முடியாதபடி கடலுக்குள் வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Mandapamindian coast guardramanathapuramDRIseizes 4.9 kgs of smuggled goldCustoms Preventive Unit
Share
Tweet
SendShare
Previous Post

கேண்டிடேட்ஸ் செஸ் : வெற்றி பெற்ற இந்தியர்!

Next Post

2024 ஐபிஎல் : புள்ளி பட்டியல்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies