இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாட தயார் என வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.
இந்திய வம்சாவளியான இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கிரிக்கெட்டை அதிகம் விரும்பக் கூடியவர். இவர் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சந்தித்துள்ளார்.
அப்போது, இங்கிலாந்து பிரதமருக்கு ACE Programme நிறுவனர் Ebony-Jewel Rainford-Brent மற்றும் இயக்குனர் Chevy Green ஆகியோரால் ஜெர்சி வழங்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நடத்த உள்ளது. அதேபோல், 2030 ஆம் ஆண்டு ஆண்கள் டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து நடத்த உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 35 மில்லியன் பவுண்டுகளை தொகுத்து அறிவித்துள்ளார். இந்தத் தொகை உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நகரங்களில், அனைத்து வானிலைகளையும் தாக்குப்பிடிக்கும் வகையில் 16 குவிமாடங்களைக் (all-weather domes) கட்டுவதற்காக செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்ற போது, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரிச்சர்ட் தாம்சன் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டையும் பெற்றார்.
பின்னர் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசினார். அத்துடன் வலை பயிற்சியிலும் விளையாடினார்.
ஆண்டர்சன் பந்து வீச ரிஷி சுனக் பேட்டிங் செய்துள்ளார். மேலும், தன்னை பந்துவீசி போல்டாக்கிய நபரை அழைத்துப் பாராட்டும் தெரிவித்தார் ரிஷி சுனக். இதுகுறித்த வீடியோவை பிரதமர் ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.