தமிழகத்தில் 4-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை, விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பணிகளில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதன் காரணமாக, தமிழகத்தில் 4-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, வரும் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள், ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில், நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.