பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதேபோல், மகாராஷ்டிராவில் இருந்து அசோக்ராவ் சங்கர்ராவ் சவான், ராஜஸ்தானில் இருந்து சுன்னிலால் கராசியா, தெலுங்கானாவில் இருந்து அனில் குமார் யாதவ் மண்டாடி, மேற்கு வங்கத்தில் இருந்து சுஷ்மிதா தேவ் மற்றும் முகமது நடிமுல் ஹக் ஆகியோர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.