தர்மத்திற்கும் விஷேச தர்மத்திற்கும் என்ன வேறுபாடு!
Jan 14, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தர்மத்திற்கும் விஷேச தர்மத்திற்கும் என்ன வேறுபாடு!

Murugesan M by Murugesan M
Apr 7, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது மரணத்துக்குப் பின்,
தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன்,

சூரியனிடம்,

“தந்தையே!
நான் என் நண்பன் துரியோதனனுக்கு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், அவன் பக்கம் போர் புரிந்தேன்.

ஆனால்
வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!”
என்று புலம்பினான்.

அப்போது சூரிய பகவான்,

“இல்லை கர்ணா!
கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே.

நீ ஒரு தவறு செய்துவிட்டாய்.
செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால்
கண்ணனோ சாமானிய தர்மங்களை விட,
உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.

க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்”

என்று அதனால்தான் சொல்கிறோம்.

அந்தக் ‘கண்ணன்’ என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும், முரண்பாடு வருகையில்,

விசேஷ தர்மத்தை கைக்கொள்ள வேண்டும்.
நீ அதை விட்டு விட்டுச் சாமானிய தர்மத்தை கைக்கொண்டு,

விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால்தான் அழிந்தாய்.

தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்த தர்மம் தான்.

அதற்காக
இரணியனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா?
நரசிம்மர் என்ற விசேஷ தர்மத்தை அல்லவோ கைக்கொண்டான்.

விபீஷணனும்
தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி பாராட்டுதலாகிய சாமானிய தர்மத்தை விட்டு, விசேஷ தர்மமான ராமனை வந்து பற்றவில்லையா?

தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பதற்காக,
கைகேயியின் ஆசைக்கு பரதன் உடன்பட்டானா?

மகனே!
சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆனால்
விசேஷ தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில்,

விசேஷ தர்மத்தையே முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டும்.

அவ்வகையில்
கண்ணனே அனைத்து தர்மங்களுக்கும் சாரமான, விசேஷ தர்மம் என உணர்வாயாக!” என்றார்.

வடமொழியில்
‘வ்ருஷம்’ என்றால் தர்மம் என்று பொருள்.

வ்ருஷாகபி:’ என்றால் தர்மமே வடிவானவர் என்று பொருள்.

கர்ணனுக்கு
சூரியன் உபதேசித்தபடி, தர்மமே வடிவானவராகத் திருமால் விளங்குவதால்

‘வ்ருஷாகபி:’ என்றழைக்கப் படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 102வது திருநாமம்.

வ்ருஷாகபயே நமஹ”

என்ற திருநாமத்தை தினமும் சொல்லி வந்தால், முரண்பாடான சூழ்நிலைகளில் நாம் சிக்கிக் கொள்ளும்போது,

சரியான முடிவெடுக்கும் ஆற்றலை, திருமால் நமக்குத் தந்தருள்வார்….

எந்த சூழ்நிலையிலும் நாம் நமது தர்மத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்

காகங்களுடன் குயில்கள் பழகினாலும் குயில்கள் தனது இனிய குரலை மாற்றுவதில்லை

நறுமணம் தரும் மலர்
இடம் மாறி மலர்ந்தாலும்
தனது ஒரிஜினல் நறுமணத்தை தர மறுப்பதில்லை

ஆடுகளுடன் சிங்கங்கள் நட்பு வைத்தாலும்
ஆட்டின் குணம் சிங்கத்துக்கு வருவதில்லை

அதேபோல் 7 ம் ஆறிவை தேடிபோய் கொண்டிருக்கம்
மனிதனாகிய நாம்
எங்கு இருக்கிறோம் என்பதல்ல முக்கியம்,

நமது சனாதன தர்மத்தின் பாதுகாவலாக இருக்கிறோமா?

நமது தர்மத்தை நாம் கடை பிடிக்கிறோமா என்பதே முக்கியம்!.

Tags: krishna
ShareTweetSendShare
Previous Post

பாய்ந்து சென்ற நிர்வாகிகள் – தப்பியோடிய திமுக அமைச்சர்!

Next Post

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா மும்பை இந்தியன்ஸ் ?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies