நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது விரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சோனார்வாடா பகுதியைச் சேர்ந்தவர் அருண்.எஸ்.வர்ணேகர். இவர் பிரதமர் மோடியின் தீவிர பக்தர். பிரதமர் மோடிக்காக ஏற்கனவே, கோயில் கட்டி சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்.
இந்த நிலையில், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று தனது விரலை துண்டித்து பிரார்த்தனை செய்தார். மேலும், விரைல வெட்டும்போது, வெளியேறிய இரத்தம் மூலம் காளிமாதா மோடியைக் காக்க என எழுதியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த, அருண்.எஸ்.வர்ணேகர், பிரதமராக மோடி வந்ததால்தான் நமது நாடு வல்லரசு நாடாக உருவெடுத்துள்ளது. உலக நாடுகள் பலவும் இந்தியாவை உற்று நோக்கி வருகிறது.
தேசத்தையும், நாட்டு மக்களையும் மற்றவர்களைவிட மோடி அதிகமாக நேசிப்பதால், அவரே மீண்டும் பிரதமராக வரவேண்டும்.இதற்காகத்தான் எனது விரலை துண்டித்தேன் என்றார்.