தி.மு.க.வின் தேர்தல் வித்தைகளால் கோவையில் உள்ள இளைஞர்களையும், விளையாட்டு ஆர்வலர்களையும் ஏமாற்ற முடியாது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என திமுக கூறிய நிலையில், கோவையில் கடந்த 3 ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியாத கட்சி திமுக என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தமிழக முதல்வர் ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டில் அவர் அளித்த 511 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன, தோல்வியை உணர்ந்த பிறகு மேலும் வாக்குறுதிகளை வாக்குறுதிகளை அவர் அளித்து வருகிறார்.
We want to remind TN CM Thiru @mkstalin that the 511 poll promises he gave in 2021 remain unfulfilled, and he first attends to those before making further promises after sensing defeat.
The electoral stunts of DMK cannot deceive the youth & the sports enthusiasts in Coimbatore… https://t.co/8Qpr0fVzmz
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 7, 2024
தி.மு.க.வின் தேர்தல் வித்தைகளால் கோவையில் உள்ள இளைஞர்களையும், விளையாட்டு ஆர்வலர்களையும் ஏமாற்ற முடியாது.
கோவையில் கடந்த 3 ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியாத கட்சி திமுக. திமுக கட்சி இன்று கோவையில் மைதானம் அமைக்கபடும் என உறுதியளிக்கிறது, இது இந்த ஆண்டின் நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டியது மற்றும் கோயம்புத்தூர் மக்களின் கைதட்டலுக்குத் தகுதியானது எனக் குறிப்பிட்டுள்ளார்.