சென்னையில் பறக்கும் படையினர் கைப்பற்றிய பணத்திற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததுள்ளார்.
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு பறிமுதல் செய்தனர். இந்த பணத்திற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
எனக்கு சொந்தமான எந்த பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனக்கு நெருக்கடி கொடுக்க சிலர் முயற்சி செய்கின்றனர். என்னை டார்கெட் செய்கின்றனர் என்பது மட்டும் தெரிகிறது. எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதால், அதை பொறுத்து கொள்ள முடியாமல் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.
இது மக்களை திசைதிருப்ப திமுக-வினர் செய்த வேலை. எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது. எனது வெற்றி உறுதியாகிவிட்டது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.