பெண்களுக்கு நிதியுதவி அளிக்கவேண்டும் என்பது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பெரிய கொள்கையாகவுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய அரசின் சாதனைகளைப் பற்றி பாரதம் முழுக்க விவாதித்து வரும் நிலையில், மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பல மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
இந்த விவாதங்களுக்கு மத்தியில், ஆண்கள் என்ன சொன்னாலும், யாருக்கு வாக்களிப்பது என்பதில் நம் பாரத நாட்டுப் பெண்கள் உறுதியாக உள்ளனர்.
அதில் பெரும்பான்மையான பெண்கள், பாரதத்தின் ஒரு பெண் வாக்காளராக, எனது வாக்கு திட்டவட்டமாக மோடிக்கு தான் என்று கூறுகின்றனர்.
ஏனென்றால் சுதந்திர பாரதத்தில் முதல்முறையாக நாங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிதி விஷயங்களில் பெண்கள் குரல் கொடுக்க உதவிய ஒரு அரசாங்கம் தான் மோடி அரசு என்று பெரும்பாலான பெண்கள் கூறுகின்றன.
அப்படி நம் பாரத பிரதமர் மோடி பெண்களின் வளர்ச்சிக்காக செய்த திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
ஜன்-தன் கணக்குகள் :
இந்தியாவில் பெண்களுக்கு தனியாக வங்கி சேவைகளும், நிதியுதவிகளும் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் பாரத பிரதமர் மோடியின் அரசு கொண்டு வந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா வங்கி கணக்குகள்.
இந்தியாவில் முன்னதாக ஆண்கள் மட்டுமே தங்கள் பெயரில் வங்கிக் கணக்குகள், காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் சேமிப்புகளை வைத்திருந்தனர். மனைவி வெறும் மட்டுமே நாமினியாக இருந்தனர்.
ஜன்தன் கணக்குகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்றும், மானியங்களைப் பெற வேண்டும் என்றும் மோடி அரசு வலியுறுத்தியபோது, முதன்முறையாக பல பெண்கள் தங்கள் பெயரில் வங்கிக் கணக்குகளை உருவாக்கினர்.
இதன் மூலம் நம் பாரத பெண்கள் சுதந்திரமாக தங்களுக்கென தனி வங்கி கணக்கை வைத்து பணத்தை சேமித்து வருகின்றனர்.
முத்ரா யோஜனா மற்றும் அரசு இ சந்தை :
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிகளுக்காக பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது தான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்.
நம் பாரதத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் பல பெண்களுக்கு எண்ணற்ற கனவுகளும், சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்ற ஆசையும், நிறைய படைப்பாற்றலும் உள்ளது.
ஆனால் அந்த படைப்பாற்றலை பெரிய அளவு கொண்டுசெல்ல முடியாமல் போகிறது. ஏனெனில் அதற்காக போதிய நிதி உதவி இல்லாததும், எப்படி நிதி உதவி பெறுவது என்பது பற்றிய தெரியாமல் இருப்பதுமே காரணமாக உள்ளது.
இந்த கவலையை போக்கி எளிதாக நிதி உதவி பெற்று தங்களின் கனவுகளை நினைவாக்க பல பெண்களுக்கு உதவியாக இருந்தது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்.
அரசு இ சந்தை :
பொதுத்துறை மற்றும் அரசு துறைகளுக்கு தேவையான பொருட்களை, ‘ஆன்லைன்’ வாயிலாக வாங்க, ‘ஜெம்’ என்ற, ‘கவர்ன்மென்ட் இ – மார்க்கெட்’ இணையதளத்தை, பாரத பிரதமர் மோடியின் அரசு, 2017 ஆம் அறிமுகம் செய்தது.
மத்திய அரசு துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள், ஜெம் வழியாக மட்டுமே கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன் வாயிலாக பல பெண்கள் முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற்று நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள், ஜெம் வழியாக கொள்முதல் செய்தனர்.
2023 ஆம் ஆண்டின் நிலவரப்படி தமிழகத்தின் மட்டும் தமிழகத்தில் மட்டும், 1,900 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளது. நம் பாரத முழுவதும் இன்றைய நிலவரப்படி, இந்த இ சந்தை மூலம் ரூ. 22,708 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.
சோலார் சர்க்கா திட்டம் :
சோலார் சர்க்கா என்பது சூரியசக்தியில் இயங்கும் ஜவுளி இயந்திரம் ஆகும். இதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோலார் சர்க்கா திட்டத்தை பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் தொடங்கப்பட்டது.
செல்வமகள் சேமிப்பு திட்டம் ( சுகன்யா சம்ரித்தி யோஜனா ) :
பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்காக சிறப்பு சேமிப்பு திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த சேமிப்பு திட்டத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் ஆரம்பித்துக் கொள்ளலாம்.
ஒரே குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகள் இந்த திட்டத்தை தொடங்கி, அதன் பலனைப் பெறலாம்.
இந்த திட்டமானது பெண் குழந்தைகளைக் பெற்ற பெற்றோருக்கு அவர்களின் திருமணம் மற்றும் எதிர்காலக் கல்விச் செலவுகளைக் கவனித்துக்கொள்வதற்காக நிதியை திரட்ட உதவிசெய்கிறது.
இந்த கணக்கில் செலுத்தப்படும் வைப்புத் தொகைக்கு வட்டிவீதம் 7.6 சதவீதம் ஆக உள்ளது. இக்கணக்கிற்கான வட்டி அந்த ஆண்டின் இறுதியில் வரவு வைக்கப்படும்.
கணக்கு தொடங்கப்படும் பெண் குழந்தையின் 18 வயது வரை இந்த கணக்கு அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலராலும், 18 வயது பூர்த்தியான பிறகு அவர்களால் சுயமாகவும் கணக்கில் வரவு, செலவை மேற்கொள்ள முடியும் வகையில் உள்ளது.