சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீசாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலின் இயக்கத்தில் தனது 170 படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகின்றார்.
இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் தலைப்பு ரஜினி பிறந்த நாள் அன்று வேட்டையன் என்று வெளியானது. இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, திருவனந்தபுரம், மும்பை, ஆந்திராவில் உள்ள கடப்பா, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது.
அந்த வகையில், இந்த படம் அக்டோபர் மாதம் ரிலீசாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
முன்னதாக லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கவுள்ள தலைவர் 171 படத்தின் அப்டேட் வந்தது. அப்படி தலைப்பு டீசர் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் ரீலீஸ் தேதி அறிவித்தது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த ரசிகர்களுக்கு டபுள் விருந்தாக அமைந்துள்ளது.