முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி!
Mar 15, 2026, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி!

Murugesan M by Murugesan M
Apr 8, 2024, 09:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இந்த தொடரின் 20-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 234 ரன்களை எடுத்துள்ளது.

இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி ரன்களை எடுத்தனர். இதில் ரோகித் சர்மா 3 சிக்சர்கள், 6 பௌண்டரீஸ் என மொத்தமாக 27 பந்துகளில் 49 ரன்களை எடுத்து அரைசதத்தை தவறவிட்டார்.

பின்னர் களமிறங்கிய சூர்யா குமார் யாதவ் தான் சந்தித்த 2வது பந்தில் டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் 42 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 3 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என 33 பந்தில் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய டிம் டேவிட் மற்றும் ஷெப்பர்ட் அதிரடியாக விளையாடி அணிக்கு பெறும் உதவியாக இருந்தனர். கடைசி ஓவரில் மட்டும் 32 ரன்கள் எடுக்கப்பட்டது.

மொத்தமாக டிம் டேவிட் 2 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 21 பந்துகளில் 45 ரன்களை எடுத்தார். அதேபோல் ஷெப்பர்ட் 3 பௌண்டரீஸ் மற்றும் 4 பௌண்டரீஸ் என மொத்தமாக 10 பந்துகளில் 39 ரன்களை எடுத்தார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 234 ரன்களை எடுத்துள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் அதிகபட்சமாக அக்சர் படேல் மற்றும் அன்ரிச் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதேபோல் கலீல் அகமது 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதை தொடர்ந்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி களமிறங்கியது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இதில் டேவிட் வார்னர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய அபிஷேக் 5 பௌண்டரீஸ் என மொத்தமாக 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் தொடக்க வீரராக விளையாடி வந்த பிரித்வி ஷா 8 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 66 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி 3 பௌண்டரீஸ் மற்றும் 7 சிக்சர்கள் என மொத்தமாக 25 பந்துகளில் 71 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இருப்பினும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்தது.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரங்களில் வெற்றி பெற்று இந்த தொடரின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Tags: t 20ipl 2024Mumbai Indians recorded their first win!
ShareTweetSendShare
Previous Post

ஈசனுக்கு படை வீடு எட்டு!

Next Post

தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies