அயர்லாந்து பிரதமராக பதவியேற்றுள்ள சைமன் ஹாரிஸூக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்த லியோ வரத்கர்க்குப் பதிலாக சைமன் ஹாரிஸ் அயர்லாந்தின் புதிய பிரதமராக நேற்று பதவி ஏற்றார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மிக இளம் வயதில் அயர்லாந்தின் பிரதமராக பதவியேற்றுள்ள @SimonHarrisTD அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஜனநாயக நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நமது வரலாற்று உறவுகளை உயர்வாக மதிக்கவும், இந்தியா-அயர்லாந்து இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம் என எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.