கோடை விடுமுறையையொட்டி, சென்னை – நெல்லை இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, தெற்கு ரயில்வே சார்பில், பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றனர். அந்த வகையில், சென்னை எழும்பூர் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, திருநெல்வேலியில் இருந்து, வரும் 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், அடுத்த மாதம் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும், மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் – 06070), மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
அதேபோல், மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர் இருந்து, வரும் 12, 19, 26 ஆகிய தேதிகளிலும், அடுத்த மாதம் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளிலும், பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் – 06069), மறுநாள் காலை 7.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருச்சி, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியே இயக்கப்படுகிறது.