ஊழல் தான் திமுகவின் உயிர் மூச்சாக உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டினார்.
கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜகவின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய எல். முருகன்,
திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இந்த அவல நிலையை போக்க பிரதமர் மோடி இங்கு வந்திருக்கிறார். ஊழல் தான் திமுகவின் உயிர் மூச்சாக உள்ளது. திமுக ஆட்சியில் தமிழகம் போதையில் தள்ளாடுகிறது எனக் குற்றம்சாட்டினார்.