தமிழக மீனவர்களின் உயிரைப் பணயம் வைத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நாட்டின் ஒருமைப்பாட்டை சமரசம் செய்ததற்காகவும், நமது தமிழக மீனவர்களின் உயிரைப் பணயம் வைத்ததற்காகவும் காங்கிரஸ் தலைவர்களுக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை.
Congress leaders carry no guilt for having compromised our territorial integrity & for putting the lives of our Tamil fishermen at risk.
“Not a Blade of grass grows there” for Aksai Chin & “who lives there” for Katchatheevu reflects Congress’ mindset.
Congress has to… pic.twitter.com/oWK9OLpSFK
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 10, 2024
அக்சாய் சின்னில் ஒரு புல்லும் அங்கே வளரவில்லை, கச்சத்தீவீல் யார் வசிக்கிறார்கள், என்பது காங்கிரஸின் மனநிலையை பிரதிபலிக்கிறது.
இது போன்ற உணர்ச்சியற்ற கருத்துக்களுக்காகவும், நமது பிரதமர் நரேந்திர மோடி பற்றி கூறிய கருத்துகளுக்காகவும், தமிழக மீனவர்களிடம் காங்கிரஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதமர் மோடி மீனவ சமூகத்திற்கு பாதுகாப்பாக திகழ்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.