ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதமானது இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித காலமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தின் போதுதான் இறைத் தூதரான முகமது நபி மீது இறைவன் அல்லாஹ் அவா்களால் புனித குரான் இறக்கி வைக்கப்பட்டது என்று இஸ்லாமிய புராணங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள். இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் என தெரிவித்துள்ளார்.