மதிமுகவில் இருந்து வைகோவின் மருமகன் கார்த்திகேயன் கோபாலசாமி மற்றும் புதுக்கோட்டை செல்வம் ஆகியோர் விலகி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைந்த வருகின்றனர். அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் உட்பட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பலரும் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருவது அதிகரித்துள்ளது.
அந்த வகையில், வைகோவின் மருமகன் முறை உறவினரான கார்த்திகேயன் கோபாலசாமி, மதிமுகவின் முன்னாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர், செய்தித் தொடர்பாளர் புதுக்கோட்டை செல்வம் ஆகியோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
மதிமுகவின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த புதுக்கோட்டை செல்வம் அண்மையில் கட்சியில் இருந்து விலகியிருந்தார். இதனையடுத்து தற்போது அவர் வைகோவின் மருமகனையும் அழைத்துக்கொண்டு போய் பாஜகவில் இணைந்துள்ளார்.